சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

புதிய தலைமை தகவல் ஆணையராக ஏ.கே.எம்.நாயக் நியமனம்

பெங்களூர், ஜன. 8: கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி வகித்து அண்மையில் ஓய்வுபெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி, கர்நாடக மாநிலத்தின் புதிய தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட உள்ளார் முதல்வர் எடியூரப்பா, எதிர்க்கட்சி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

பெங்களூர், ஜன. 8: கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி வகித்து அண்மையில் ஓய்வுபெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி, கர்நாடக மாநிலத்தின் புதிய தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட உள்ளார்

முதல்வர் எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேலவை அவைமுன்னவரும், அமைச்சருமான வி.எஸ்.ஆச்சார்யா ஆகியோர் அடங்கிய தகவலறியும் உரிமை தேர்வு குழுவின் கூட்டம் பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் தலைமை தகவல் ஆணையராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஏ.கே.எம்.நாயக்கை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.தங்கராஜ், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி எம்.ஆர்.பூஜார், வழக்கறிஞர் ரமாநாயக், கதக் ரோட்டரி சங்க உறுப்பினர் சேகர் சஜ்ஜன் ஆகியோரின் பெயர்களை மாநில தகவல் ஆணையர்கள் பதவிக்கு இக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 5 பதவிகளுக்கு 60 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.