நன்னெறிகள் போதிக்காத கல்விமுறை சமூகத்தை சீரழிக்கும் என ஆளுநர் வஜுபாய்வாலா கூறினார்.
மைசூரில் திங்கள்கிழமை
ஜேஎஸ்எஸ் உண்டு உறைவிடப் பள்ளியின் பொன்விழாவைத் தொடக்கி வைத்து அவர் பேசியது: பள்ளிப் பருவத்தில் ஆசிரியர்களின் அறிவுரைகளை மாணவர் கேட்டு பின்பற்றுவார்கள். எனவே, இந்த காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு நன்னெறிகளையும், நல்லொழுக்கங்களையும் போதிக்க வேண்டும். பள்ளிகளில் நன்னெறிகளை போதிக்கத் தவறினால், மாணவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது கடினம்.
நன்னெறிகளை போதிக்காத கல்விமுறை சமூகத்தை சீரழிக்குமென்பதை ஆசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
நல்லொழுக்கம் நிறைந்த சமூகம் உருவானால், அது நாட்டின் மேன்மைக்கு பயன்படும்.
கற்றறிந்தவர்கள் தான் ஊழலில் ஈடுபடுகிறார்கள். பள்ளியில் நன்னெறிகளை கல்லாததே இதற்கு முக்கியக் காரணம். வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கான துணிச்சல், நேர்மை, அறிவை மாணவர்களுக்கு போதிக்க வேண்டும் என்றார்.
முதல்வர் சித்தராமையா பேசியது: கல்வி என்பது வெறும் பட்டம் பெற்று வேலைக்கு சேருவது அல்ல. சமூகத்தின் நலன் நாடும் ஆளுமையை பெறுவதாக கல்வி அமைய வேண்டும். அறிவியல் மனப்பான்மை, மதசார்பின்மை மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றை இளம்பருவத்திலேயே மாணவர்களுக்கு போதித்துவிட்டால், எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு அசைக்க முடியாத வளமாக மாறிவிடுவார்கள்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் எடுத்துவரும் முயற்சிக்கு பின்னரும், மாநிலத்தின் எழுத்தறிவு விகிதம் 87 சதவிதமாக உள்ளது. இதில், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 68 சதவிதம். இதை மாற்றியமைக்கவே மதிய உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எழுத்தறிவு விகிதம் பெருக அனைவரும் பங்காற்ற வேண்டும் என்றார்.
விழாவில், சுத்தூர் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமிகள், அமைச்சர்கள் சீனிவாஸ்பிரசாத், மகாதேவபிரசாத், மகாதேவப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

