சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்: விதான செளதாவைச் சுற்றி 144 தடை உத்தரவு
திங்கள்கிழமை (பிப். 5) முதல் விதான செளதாவில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறவதையொட்டி, 2 கி.மீ சுற்றளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


திங்கள்கிழமை (பிப். 5) முதல் விதான செளதாவில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறவதையொட்டி, 2 கி.மீ சுற்றளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகர காவல் ஆணையர் சுனில்குமார் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை: பெங்களூரு விதான செளதாவில் உள்ள சட்டப்பேரவையில் பிப். 5-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதிவரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதனையொட்டி 5-ஆம் தேதி காலை 6 மணி முதல் 9-ஆம் தேதி இரவு 12 மணிவரை விதான செளதாவைச் சுற்றியுள்ள 2 கி.மீ. பரப்பளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவின் போது, அப் பகுதியில் 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொதுக்கூட்டம், போராட்டம், ஊர்வலம், தர்னா நடத்துவதோ கூடாது. மேலும், ஆயுதங்கள், வெடிபொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...