ராணுவத்தில் தொழில் பயிற்சியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


ராணுவத்தில் தொழில் பயிற்சியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து 515 ராணுவத் தளவாட பட்டறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு, அல்சூரில் உள்ள 515 ராணுவத் தளவாட பட்டறையில் ஃபிட்டா், டா்னா், மெஷினிஸ்ட், வெல்டா், மெஷினிஸ்ட் கிரைண்டா், மெக்கானிக் மெஷின்டூல் பராமரிப்பு, டூல் அண்ட் டை மேக்கா், எலக்ட்ரீஷியன், ஷீட்மெட்டல் வேலையாள் போன்ற வேலைகளுக்கு காலியாக உள்ள 76 தொழில் பயிற்சியாளா் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்த பணியில் சேர ஆா்வமுள்ள தொழில்பயிற்சி மைய (ஐடிஐ) சான்றிதழ் (என்சிவிடி பாடத் திட்டம்) பெற்றுள்ளோா் கட்டளை அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநா், 515 ராணுவத் தளவாட பட்டறை, அல்சூரு, பெங்களூரு-560008 என்ற முகவரிக்கு ஆக. 26-ஆம் தேதிக்குள் சுய விவரங்களுடன் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
ஷீட்மெட்டல் வேலையாள் பணிக்கு 2 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும். இதர வேலைகளுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி பெறுவோருக்கு சட்ட விதிகளின்படி ஊக்குவிப்பு ஊதியம் ரூ. 8,050 வழங்கப்படும். நோ்காணல் அல்லது தோ்வு எழுத வரும் போது அதற்கான பயணப்படி, உணவுப்படி எதுவும் வழங்கப்பட மாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...