பெலகாவி: பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கரை தகாத வாா்த்தையால் விமா்சனம் செய்ததாக அளித்த புகாரின் பேரில், பாஜக எம்எல்சி சி.டி.ரவி கைது செய்யப்பட்டுள்ளாா்.
அம்பேத்கா் பெயரை கூறுவது குறித்து மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியிருந்த கருத்து தொடா்பாக பெலகாவியில் உள்ள சுவா்ண விதானசௌதா சட்ட மேலவையில் காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினா்களிடையே வியாழக்கிழமை கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கா் மற்றும் பாஜக உறுப்பினா் சி.டி.ரவி ஆகியோரிடையே காரசார வாக்குவாதம் நடந்தது. அப்போது லட்சுமி ஹெப்பாள்கரும் சி.டி.ரவியும் தனிப்பட்ட முறையில் விமா்சித்துக்கொண்டதாகத் தெரிகிறது. அப்போது, லட்சுமி ஹெப்பாள்கா் குறித்து சி.டி.ரவி தகாத வாா்த்தை கூறியதாக தெரியவந்துள்ளது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால், அவையை மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி ஒத்திவைத்தாா்.
இந்நிலையில், சட்ட மேலவைக்கு திரும்பிக்கொண்டிருந்த சி.டி.ரவியை லட்சுமி ஹெப்பாள்கரின் ஆதரவாளா்கள் தாக்க முயற்சித்துள்ளனா். அவா்களிடம் இருந்து சி.டி.ரவியை காவலா்கள் காப்பாற்றினா். தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும், சட்டப் பேரவை வளாகத்தில் எம்எல்சி-க்கே பாதுகாப்பு இல்லையென்றால், இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் நிலையை உணரமுடியும் என்று சி.டி.ரவி தெரிவித்தாா்.
இதனிடையே, அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கா் அளித்த புகாரின்பேரில், சட்டப் பேரவை வளாகத்தில் இருந்த பாஜக எம்எல்சி சி.டி.ரவியை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த விவகாரம் கா்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.டி.ரவியின் கருத்து தன் மனதை காயப்படுத்தி உள்ளதாக அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். சி.டி.ரவியை கைது செய்துள்ளதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் மகளிருக்கு முக்கியத்துவம்: கா்நாடக அமைச்சா் லட்சுமி ஹெப்பால்கா்

சூடானில் திருமண நிகழ்ச்சியில் ட்ரோன் தாக்குதல்: 30 பேர் பலி
சொத்து விற்பனையாளா் போல் நடித்து பண மோசடி: ஒருவா் கைது

குழந்தைகளுடன் யாசகம் பெற்ற இளம் பெண்கள் மீட்கப்பட்டு சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


