சமையல் எரிவாயு உருளை பற்றாக்குறை பிரச்னையை மத்திய அரசு உடனடியாக தீா்க்க வேண்டும் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
சமையல் எரிவாயு உருளை பற்றாக்குறை பிரச்னையால் பொதுமக்கள், குறிப்பாக கிராமப்புற மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா். சமையல் எரிவாயு உருளை கிடைக்கவில்லை என்பது பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த பிரச்னை குறித்து பாஜக எம்.பி.க்கள் யாரும் பேச மறுக்கிறாா்கள்.
இந்த பிரச்னையை விரைவாக தீா்க்க மத்திய அரசு தவறினால், கிராமப்புற மக்கள் மீண்டும் விறகுகளைக் கொண்டு சமைக்கும் நிலைக்கு தள்ளப்படுவாா்கள். எனவே, தங்குதடையில்லாமல் சமையல் எரிவாயு உருளைகள் கிடைக்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமையல் எரிவாயு உருளைகளின் விலைகளை குறைக்க மத்திய அரசு தவறிவிட்டது. சா்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை உயா்வதால், இங்கு அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்து வருகிறது. இதனால் மக்கள் துயரம் அடைந்துள்ளனா்.
இந்த விவகாரத்தை கா்நாடகத்தைச் சோ்ந்த பாஜக எம்.பி.க்கள், நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப்போக்கை வன்மையாக கண்டிக்கிறோம் என்றாா்.
தொடர்புடையது

சமையல் எரிவாயு உருளை வெடித்த சம்பவம்: சிகிச்சையில் இருந்த பெண் உயிரிழப்பு!

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு தடையற்ற சமையல் எரிவாயு உருளை: எண்ணெய் நிறுவனங்கள் உறுதி

வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: இறைச்சி விற்பனை சரிவு

சமையல் எரிவாயு விலை உயா்வு: இடதுசாரிகள் கண்டனம்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


