கர்நாடகத்தில் மலைவாழ் மக்களுக்கு உதவும் வகையில் நடமாடும் மருத்துவச் சேவையை அந்த மாநில துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் புதன்கிழமை தொடக்கிவைத்தார்.
பெங்களூரு விதான செளதா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 8 கோடி மதிப்பிலான 16 நடமாடும் மருத்துவ வாகனங்களைத் தொடக்கிவைத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
வனப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு உரிய மருத்துவ வசதி கிடைப்பதில்லை. எனவே, அவர்களுக்கு உதவும் வகையில் தலா ரூ. 50 லட்சத்தில் 8 நடமாடும் மருத்துவ வாகனங்கள் இயக்கப்படவுள்ளன. முதல் கட்டமாக குடகு மாவட்டத்தில் சோமவார்பேட்டை, வீராஜ்பேட்டை, மடிகேரி மற்றும் மைசூரு மாவட்டத்தில் பிரியாபட்டணா, எச்.டி.கோட்டை, ஹுன்சூர், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொள்ளேகால், குண்டல்பேட்டை பகுதிகளில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
விரைவில் 2-ஆம் கட்டமாக தென்கன்னட மாவட்டம் பண்டுவால், புத்தூர், உடுப்பி மாவட்டம் குந்தாபுரா, உடுப்பி, சிக்மகளூரு மாவட்டம் மூடுகெரே, தரிகெரே, சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுரா, வட கர்நாடக மாவட்டம் ஹுலியால் உள்ளிட்ட வட்டங்களில் நடமாடும் மருத்துவ வாகனங்கள் இயக்கப்படும்.
அனைத்து வாகனங்களிலும் மருத்துவர், செவிலியர், உதவியாளர், ஆய்வக உதவியாளர், ஓட்டுநர் இடம் பெற்றிருப்பர். தினம்தோறும் காலை, மாலை 2 கிராமங்களுக்கு நடமாடும் வாகனம் சென்று, அங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க உதவும் என்றார்.
நிகழ்ச்சியில், சமூக நலத் துறை அமைச்சர் பிரியங் கார்கே, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் வெங்கடரமணப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஜகவுக்குள் மிகப்பெரிய வினாத்தாள் மோசடி கும்பல் செயல்படுகிறது: சஞ்சய் ராவத்!

தலைவரான தனுஷ்! குழப்பத்தில் ரசிகர்கள்!
பஞ்சாப் வினாத்தாள் கசிவு! அமைச்சரை ராஜிநாமா செய்யக் கோரி பாஜக எம்பிக்கள் போராட்டம்!

பட்டமளிப்பு விழாவில் கண்ணீர் விட்டு அழுத மாணவர்களால் பரபரப்பு!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


