/

வறுமை ஒழிப்பு, சமூக மேம்பாடு குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம்

தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, சமூகமேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்ததை பி.ஆர், சி.ஆர் ஷெட்டி அறக்கட்டளை செய்து கொண்டுள்ளது.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 9:19 am IST

தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, சமூகமேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்ததை பி.ஆர், சி.ஆர் ஷெட்டி அறக்கட்டளை செய்து கொண்டுள்ளது.
பெங்களூரில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் புதன்கிழமை சி.ஆர்.ஷெட்டி அறக்கட்டளையுடன், கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, சமூகமேம்பாடு தொடர்பான பணிகளை செய்ய புரிந்துணர்வு ஒப்பந்ததை பி.ஆர்,சி.ஆர் ஷெட்டி அறக்கட்டளை செய்து கொண்டது. இதைத் தொடர்ந்து அறக்கட்டளையின் மேலாண் அறங்காவலர் பினாய் ஷெட்டி செய்தியாளர்களிடம் கூறியது: 
பெங்களூரில் மட்டுமன்றி மாநிலத்தில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, சமூக மேம்பாடு தொடர்பான வளர்ச்சிப் பணிகளை செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். 
பெங்களூரு மட்டுமன்றி தேசிய அளவில் வாழும் ஏழைகளின் நிலை உயர வேண்டும். வறுமையை ஒழிப்பதோடு, சமூக மேம்பாடு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் அவர்கள் சிறந்து விளங்க வேண்டும். 
இதை கருத்தில் கொண்டு, அட்சயபாத்ரா, வக்கார்டு, இஷாவித்யா, செல்கோ உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.