ரேனிகுண்டா 2 படத்தின் பாடல் புரோமோ ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) வெளியாகியுள்ளது.
இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கி கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ரேனிகுண்டா”. அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிக்கும் 5 சிறுவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு சில நாள்களுக்கு முன்பு வெளியானது. இதில் ஜானி, ஷாலி நிவேகாஸ், அபிமன்யு மற்றும் ஷாமி திலகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இயக்குநர் பன்னீர் செல்வமே தயாரிக்கும் இப்படத்துக்கு மனு ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.
இந்தத் திரைப்படத்தின் முதல் பாடல் வரும் ஜூலை 29 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதற்கான புரோமோ இன்று வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை கவிஞர் யுகபாரதி எழுத, பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.
A beautiful tune is ready to steal hearts. ⨠#Ekavali promo from #Renigunta2 is out now.
— Kings Studio (@kings_studio_) July 27, 2026
Full song drops on July 29 at 6 PM ð§
â¶ï¸ https://t.co/up7RsgpmF7
A @manuravi_7 Musical.
Sung by @sidsriram ðï¸
Directed by @Directorpanneer.
Choreography by Azar.@pff_offl pic.twitter.com/she1sOyggQ
Summary
The song promo for the movie *Renigunta 2* was released on Sunday (July 27).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அருள்வான் படத்தின் அல்லிப்பூவே பாடல் விடியோ வெளியீடு!

ரேனிகுண்டா - 2 டீசர்!

ரேனிகுண்டா - 2 திரைப்படத்தின் டீசர்!

முன்னணி இயக்குநர்கள் வெளியிடும் ரேனிகுண்டா - 2 டிரைலர்!
விடியோக்கள்

தவெக அரசின் முதல் பட்ஜெட்: மதுரை மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? | Budget | TN Budget |




