பாடகி ஜானகி உடல் தகனம் எதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

சித்தராமையாவை கண்டித்து தலித் அமைப்பினர் போராட்டம்

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவை கண்டித்து,  தலித் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

Updated On :31 டிசம்பர் 2018, 8:25 am IST

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவை கண்டித்து,  தலித் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசின் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர்,  தலித் சமூகத்தை சேர்ந்தவர்.
இவர் பெங்களூரு வளர்ச்சித் துறை,  காவல்துறையையும் கவனித்துவந்தார்.
இந்த நிலையில்,  அமைச்சரவையில் புதிதாக 8 பேரை காங்கிரஸ் இணைத்தது. அவர்களில் எம்.பி.பாட்டீலுக்கு காவல்துறையை வழங்குவதற்காக, அந்தத் துறையை ஜி.பரமேஸ்வரிடம் இருந்து காங்கிரஸ் மேலிடம் பறித்துவிட்டது. 
இதன்பின்னணியில் முன்னாள் முதல்வர் சித்தராமையா இருப்பதாக குற்றம்சாட்டிய தலித் அமைப்பினர், அவரைக் கண்டித்து மண்டியாவில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினர்.  அப்போது காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சித்தராமையா, கே.சி.வேணுகோபால் ஆகியோரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். 
இதுதொடர்பாக போராட்டக்காரர்கள் கூறியது:-
கர்நாடகத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலில் முன்னுக்கு வர சித்தராமையா தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்துவருகிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். 
தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி.பரமேஸ்வரிடம் இருந்து காவல்துறையை பறித்தது சரியல்ல. எனவே, ஜி.பரமேஸ்வரிடம் மீண்டும் காவல்துறையை ஒப்படைக்க வேண்டும்.
தலித் மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சித்தராமையா தட்டிப்பறித்துவருகிறார். தனது ஆதரவாளர்களுக்காக சுயநல அரசியலில் ஈடுபட்டுவருகிறார். தலித் தலைவரான ஜி.பரமேஸ்வருக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.