வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஏப்.14 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்: மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத்பிரசாத்

ஏப்.14-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வாய்ப்புள்ளதாக பெங்களூரு மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத்பிரசாத் தெரிவித்தார்.

Updated On :29 மார்ச் 2018, 1:17 am

ஏப்.14-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வாய்ப்புள்ளதாக பெங்களூரு மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத்பிரசாத் தெரிவித்தார்.
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பெங்களூரு மாநகராட்சி சார்பில் பாரத சாரண, சாரணியர் இயக்கம் புதன்கிழமை நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு முகாமைத் தொடக்கிவைத்து, அவர் பேசியது: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற மே 12-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டியது நமது அரசியலமைப்புச் சட்டப்படி அடிப்படை உரிமையாகும்.
எனவே, வாக்காளர் பட்டியலில் அனைவரும் பெயர் சேர்க்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க ஏப்.14-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சி அலுவலகங்கள் தவிர, இணையதளத்திலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களைச் செலுத்தலாம். 18 வயது நிரம்பியுள்ளதற்கான சான்றிதழ் இருந்தால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். 
மே 12-ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்கு ஒருவாரத்திற்கு முன்பே, வீடுவீடாகச் சென்று வாக்காளர் சீட்டுகளை மாநகராட்சி ஊழியர்கள் வழங்குவார்கள். இதில் பெயர், அடையாள எண், வாக்குச்சாவடி விவரம் இடம் பெற்றிருக்கும். எந்த வாக்காளரும் 2 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவில் வாக்களிக்க செல்லக் கூடாது என்பது விதி. எனவே, வாக்காளரின் முகவரிக்கு அருகே வாக்குச்சாவடி அமைந்திருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.