பெங்களூரில் ரூ. 1,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று ஐகியா குழுமத்தின் தேசிய துணை மேலாளர் பேட்ரிக் அண்டோனி தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
ஸ்வீடன் நாட்டில் 1943-இல் தொடங்கிய ஐகியா குழுமத்தின் வீட்டுச் சாமான் வர்த்தகம், தற்போது 52 நாடுகளில் பரவியுள்ளது.
இந்தியாவில் ஹைதராபாத்தில் விற்பனை மையத்தை தொடங்கியுள்ளோம். அதனைத்தொடர்ந்து பெங்களூரு யஸ்வந்தபுரம் ஒன்றியம் நாகசந்திராவில் விற்பனை மையத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளோம். மையத்துக்கான கட்டடப் பணிகள் அக்டோபர் 11-இல் தொடங்க உள்ளது.
பெங்களூரில் 4 லட்சம் சதுர அடியில் தொடங்க உள்ள விற்பனை மையத்தில் ரூ. 1,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். மகளிர் சமத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஐகியா குழுமத்தில் 50 சதவீதம் பெண் தொழிலாளர்கள், ஊழியர்கள் பணியாற்றுக்கின்றனர்.
பெங்களூரில் தொடங்க உள்ள விற்பனை மையத்திலும் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 50 சதவீதத்தை அளிக்க முடிவு செய்துள்ளோம். வேலைவாய்ப்பில் உள்ளூரைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
பெங்களூரைத் தொடர்ந்து, சென்னை, கொல்கத்தா, மும்பை, குருகிராம் உள்ளிட்ட நகரங்களில் புதிய விற்பனை மையங்களைத் தொடங்கவும் முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு! | TVK Ministers | TVK | Vijay

குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வேலை!
விடியோக்கள்

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு! | TVK Ministers | TVK | Vijay
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |


