பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புக்கான பொதுத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையளதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகம்-தொலைதூரக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குநரகத்தின் சார்பில் வழங்கப்படும் இளநிலை பட்டப்படிப்புகளான பிஏ, பிகாம், பிபிஏ,முதுநிலை பட்டப்படிப்புகளான எம், எம்காம், எம்எஸ்சி(கணிதம்), பட்டயப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகள் ஆகியவற்றுக்கான பொதுத்தேர்வு அக்டோபர் 10-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்தத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பங்களை அளித்திருந்த மாணவர்கள், www.dccbub.in என்ற இணையதளத்தில் இருந்து தேர்வு நுழைவுச்சீட்டை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 080-22961261,22961262, 22961263, 22961264, 22961265, 22961266, 22961267.
விடுமுறை இல்லை: அக்.10-ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடக்கவிருப்பதால், பொதுவிடுமுறை இருந்தபோதும் அக்டோபர் 8-ஆம் தேதி அலுவலகம் வழக்கம்போல இயங்கும். எனவே, மாணவர்கள் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









