முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பெங்களூரில் ரூ. 1,000 கோடி முதலீடு செய்ய திட்டம்: ஐகியா குழுமம் அறிவிப்பு

பெங்களூரில் ரூ. 1,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று ஐகியா குழுமத்தின் தேசிய துணை மேலாளர் பேட்ரிக் அண்டோனி தெரிவித்தார்.

Updated On :8 அக்டோபர் 2018, 8:30 am IST

பெங்களூரில் ரூ. 1,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று ஐகியா குழுமத்தின் தேசிய துணை மேலாளர் பேட்ரிக் அண்டோனி தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
ஸ்வீடன் நாட்டில் 1943-இல் தொடங்கிய ஐகியா குழுமத்தின் வீட்டுச் சாமான் வர்த்தகம், தற்போது 52 நாடுகளில் பரவியுள்ளது. 
இந்தியாவில் ஹைதராபாத்தில் விற்பனை மையத்தை தொடங்கியுள்ளோம். அதனைத்தொடர்ந்து பெங்களூரு யஸ்வந்தபுரம் ஒன்றியம் நாகசந்திராவில் விற்பனை மையத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளோம்.  மையத்துக்கான கட்டடப் பணிகள் அக்டோபர் 11-இல் தொடங்க உள்ளது. 
பெங்களூரில் 4 லட்சம் சதுர அடியில் தொடங்க உள்ள விற்பனை மையத்தில் ரூ. 1,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். மகளிர் சமத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஐகியா குழுமத்தில் 50 சதவீதம் பெண் தொழிலாளர்கள், ஊழியர்கள் பணியாற்றுக்கின்றனர். 
பெங்களூரில் தொடங்க உள்ள விற்பனை மையத்திலும் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 50 சதவீதத்தை அளிக்க முடிவு செய்துள்ளோம்.  வேலைவாய்ப்பில் உள்ளூரைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம். 
பெங்களூரைத் தொடர்ந்து, சென்னை, கொல்கத்தா, மும்பை, குருகிராம் உள்ளிட்ட நகரங்களில் புதிய விற்பனை மையங்களைத் தொடங்கவும் முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.