கர்நாடகத்தில் அமமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
இது குறித்து அக் கட்சியின் மாநிலச் செயலாளர் வா.புகழேந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழா கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அக் கட்சியின் மாநிலச் செயலாளர் வா.புகழேந்தி தலைமையில், பெங்களூரு சுதந்திரா நகரிலுள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில பொருளாளர் ராஜேந்திரன், மாநில துணைச் செயலாளர் பரமேஸ்வரி பரமேஸ்வரன், ராஜூ, மாவட்டச் செயலாளர் குமார், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலாளர் வெங்கடேஷ், அருள் மற்றும் நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குளம், பாசனக்கால்வாய், சாலையை ஆக்கிரமித்து ஆசிரம கட்டடம்: ஆய்வில் கண்டுபிடிப்பு
அடுத்த 5 நாள்களுக்கு கேரளத்தில் இடியுடன் பலத்த மழை: இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்தியாவில் அடுத்த வாரம் ‘க்வாட்’ வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டம்

மேற்கு வங்கம்: முதல்வா் சுவேந்து தலைமையில் முதல் மக்கள் குறைதீா் கூட்டம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
