பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்கள் குறித்து அரசு அலுவலர்களுடன் மேயர் கங்காம்பிகே திங்கள்கிழமை ஆலோசனை செய்ய உள்ளார்.
பெங்களூரு எலஹங்காவில் உள்ள விமானப்படைத் தளத்தில் பிப். 20-ஆம் தேதி முதல் விமானத் தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சியைக் காண சனிக்கிழமை பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் வாகனங்களை வாயில் எண் 5-இன் அருகே நிறுத்தம் செய்ய இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
விமான சாகசங்கள் நடைபெற்று வந்த நிலையில், முற்பகல் 11.55 மணியில் வாகன நிறுத்தமிடத்தில் திடீரென தீ பரவியது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 278 கார்கள் முழுமையாகவும், 73 கார்கள் பகுதியாக தீக்கிரையானது. இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வாகன நிறுத்தங்களில் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் மேயர் கங்காம்பிகே திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
கூட்டத்தில் சட்டவிரோதமாக உள்ள வாகன நிறுத்துமிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









