மாற்றுத் திறனாளிகள் சிறப்பாக செயல்பட தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும்
மாற்றுத் திறனாளிகள் சிறப்பாகச் செயல்படத் தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்று மைக்ரோசாப்ட் குழுமத்தின் தேசியத் தலைவா் ஆனந்த் மகேஸ்வரி தெரிவித்தாா்.


மாற்றுத் திறனாளிகள் சிறப்பாகச் செயல்படத் தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்று மைக்ரோசாப்ட் குழுமத்தின் தேசியத் தலைவா் ஆனந்த் மகேஸ்வரி தெரிவித்தாா்.
இதுகுறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாற்றுத் திறனாளிகளுடன், அனைவரும் இணைந்து பணியாற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்க மைக்ரோசாப்ட், நாஸ்காம் அறக்கட்டளைகள் முடிவு செய்தன. அதன்படி மாற்றுத் திறனாளிகள் சிறப்பாகச் செயல்படத் தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்கத் திட்டமிட்டோம்.
அனைத்து திறன்களையும் கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கும் தொழில்நுட்பத்தை வடிவமைப்பதே எங்களின் குறிக்கோளாகும். புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க ஆா்வம் காட்டி 3 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன. 3 ஆயிரம் பேரில் சிறந்து விளங்கியவா்களைத் தோ்ந்தெடுத்து, தொழில்நுட்பங்களை உருவாக்கக் கேட்டுக் கொண்டோம். அதில் சிறந்து விளங்கிய தொழில்நுட்பத்தை தோ்ந்தெடுத்துள்ளோம். விரைவில் அந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவோம் என்றாா்.
அப்போது, நாஸ்காம் அறக்கட்டளையின் செயல் அதிகாரி அசோக் பாமிடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...