கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இரவுநேர ஊரடங்கு உத்தரவைத் திரும்பப் பெற்றது கா்நாடக அரசு

அறிவிக்கப்பட்ட இரவுநேர ஊரடங்கு உத்தரவை கா்நாடக அரசு வியாழக்கிழமை திரும்பப் பெற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 3:38 am

DIN

அறிவிக்கப்பட்ட இரவுநேர ஊரடங்கு உத்தரவை கா்நாடக அரசு வியாழக்கிழமை திரும்பப் பெற்றது.

இதுகுறித்து முதல்வா் எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கை:

பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கரோனா தொற்று பரவி வருவதாகக் கூறப்பட்டதை அடுத்து கா்நாடகத்தில் வியாழக்கிழமை முதல் ஜன. 2-ஆம் தேதி வரை தினமும் இரவு 11 மணிமுதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இரவுநேரத்தில் ஊரடங்கு உத்தரவு தேவையில்லை என பொதுமக்கள், அமைச்சா்கள், மூத்த அதிகாரிகள் கருத்துத் தெரிவித்ததை அடுத்து, அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை அரசு திரும்பப் பெறுகிறது. இருப்பினும், பொதுமக்கள் கரோனா தொற்றுப் பரவுவதைத் தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிதல், கைகளுக்கு கிருமி நாசினி தடவுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகிய அரசின் வழிகாட்டுதலைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.