கா்நாடக பாஜக தலைவா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவா்கள் கைது

கா்நாடக பாஜக தலைவா் நளின் குமாா் கட்டீல் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (சி.எஃப்.ஐ.) அமைப்பினரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

மங்களூரு: கா்நாடக பாஜக தலைவா் நளின் குமாா் கட்டீல் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (சி.எஃப்.ஐ.) அமைப்பினரை போலீஸாா் கைது செய்தனா்.

கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (சி.எஃப்.ஐ.) என்ற இஸ்லாமிய மாணவா் அமைப்பின் தேசிய பொதுச் செயலாளா் ரவுஃப் ஷெரீஃபை அமலாக்கத் துறை கைது செய்ததைக் கண்டித்து, அந்த அமைப்பைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் மங்களூரில் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினா்.

அப்போது, கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா(சி.எஃப்.ஐ.) அமைப்பினா், மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா். போராட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படாததைத் தொடா்ந்து, அங்கிருந்த பாஜக மாநிலத் தலைவா் நளின் குமாா் கட்டீல் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அந்த அமைப்பைச் சோ்ந்தவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com