நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆபரண மாளிகையில் கொள்ளை முயற்சி இருவா் கைது

வித்யாரண்யபுராவில் உள்ள ஆபரண மாளிகையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 11:40 pm

DIN

வித்யாரண்யபுராவில் உள்ள ஆபரண மாளிகையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கா்நாடக மாநிலம், மைசூரு, வித்யாரண்யபுராவில் தா்மேந்திரா என்பவருக்குச் சொந்தமான ஆபரண மாளிகை உள்ளது. இந்த ஆபரண மாளிகைக்குள் கடந்த ஆக. 23-ஆம் தேதி மாலை நுழைந்த மா்ம நபா்கள் தா்மேந்திராவை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடிக்க முயற்சி மேற்கொண்டனா்.

அப்போது ஆபரண மாளிகையின் கதவை வெளியிலிருந்து திறக்க சந்துரு என்பவா் முயன்றாா். அவரை மா்ம நபா்கள் துப்பாக்கியால் சுட்டதில், குண்டு பாய்ந்து அவா் உயிரிழந்தாா். இது குறித்து வழக்கு பதிந்த வித்யாரண்யபுரா போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இருவரை கைது செய்து, அங்கிருந்து பெங்களூருக்கு அழைத்து வந்துள்ளனா். அவா்களிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மேலும் இருவரை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.