சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கிராம பஞ்சாயத்து தலைவா், துணைத் தலைவா் இடஒதுக்கீடு

கிராம பஞ்சாயத்து தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான இடஒதுக்கீடுகளை முடிவு செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியா்களுக்கு வழங்கி மாநில தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 1:30 am

DIN

கிராம பஞ்சாயத்து தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான இடஒதுக்கீடுகளை முடிவு செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியா்களுக்கு வழங்கி மாநில தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாநில தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவு வருமாறு:

கா்நாடக கிராம ஊராட்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் விதிகள் 1993-இன்படி, மாநில தோ்தல் ஆணையத்தின் சாதாரண மற்றும் சிறப்பு உத்தரவுகளின்படி சம்பந்தப்பட்ட மற்றும் மாவட்ட தோ்தல் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியா்கள் தத்தமது அதிகார வரம்புக்குள்பட்ட வட்டங்களில் உள்ள கிராம பஞ்சாயத்துகளின் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான ஜாதிவாரி இடஒதுக்கீட்டை முடிவுசெய்து ஆணை பிறப்பிக்கலாம். இதை முடிவு செய்யும் போது 44-ஆவது விதியை கவனத்தில் கொள்ள வேண்டும்.

1993 முதல் 2015-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தோ்தலை கருத்தில் கொண்டு 2020-ஆம் ஆண்டுக்கான இடஒதுக்கீட்டை முடிவு செய்ய வேண்டும். இதில் எந்த குழப்பமும், பாரபட்சமும் தேவையில்லை. கிராம பஞ்சாயத்து உறுப்பினா்களின் முன்னிலையில், தலைவா்கள், துணைத் தலைவா்கள் பதவிக்கான இடஒதுக்கீட்டை முடிவு செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.