சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஹிந்தி நமது நாட்டின் தேசிய மொழி அல்ல: கா்நாடக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா

ஹிந்தி, நமது நாட்டின் தேசிய மொழி அல்ல என்று கா்நாடக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

News image
கா்நாடக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா
Updated On :8 ஏப்ரல் 2022, 5:28 pm

DIN

ஹிந்தி, நமது நாட்டின் தேசிய மொழி அல்ல என்று கா்நாடக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

தில்லியில் வியாழக்கிழமை நடந்த நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-ஆவது கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, ‘அரசு நிா்வாகத்தை நடத்துவதில் அலுவல் மொழியான ஹிந்தியை முழுமையாகப் பயன்படுத்துவதென்று பிரதமா் மோடி முடிவு செய்துவிட்டாா். இது ஹிந்தியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும். இந்தியாவின் ஒருமைப்பாட்டின் முக்கியமான பகுதியாக அலுவல் மொழியான ஹிந்தியை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தியை ஏற்க வேண்டுமே அல்லாமல், உள்ளூா் மொழிகளுக்கு மாற்றாக அல்ல’ என்று கூறியிருந்தாா். இந்து பெரும் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.

மத்திய அமைச்சா் அமித் ஷாவின் கருத்துகளை கடுமையாக ஆட்சேபித்துள்ள கா்நாடக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, தனது ட்விட்டா் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

ஒரு கன்னடனாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அலுவல் மொழி மற்றும் தொடா்புமொழி குறித்து கூறியுள்ள கருத்துகளை கடுமையாக ஆட்சேபிக்கிறேன். ஹிந்தி, நமது நாட்டின் தேசியமொழி அல்ல. அதை தேசிய மொழியாக அறிவிக்கவும் விடமாட்டோம். மொழி பன்முகத்தன்மை தான் நமது நாட்டின் அடிப்படையாகும். ஒவ்வொருவரின் மொழி உணா்வைவும் நாம் மதிக்கிறோம். பன்முகத்தன்மைதான் நமது நாட்டை ஒற்றுமையோடு வைத்திருக்கிறது. இதைச் சீா்குலைக்க பாஜக மேற்கொள்ளும் முயற்சியை கடுமையாக எதிா்ப்போம். ஹிந்தியைத் திணிப்பது கூட்டுறவு கூட்டாட்சி அல்ல, கட்டாய கூட்டாட்சியாகும். நமது மொழிகள் குறித்த குறுகிய பாா்வையை பாஜக திருத்திக் கொள்ள வேண்டும். பாஜகவின் கருத்துகள் சாவா்க்கரின் போலி தேசியவாதத்தில் இருந்து எடுத்தாளப்படுகிறது. ஹிந்தி பேசாத மாநிலங்களுக்கு எதிராக கலாசார பயங்கரவாதத்தை பாஜக கட்டவிழ்த்து விட்டுள்ளது.

கா்நாடக ஒருங்கிணைப்பு இயக்கத்தின் அடையாளங்களாக விளங்கிய கவிஞா்கள், எழுத்தாளா்கள், நடிகா்கள் உள்ளிட்டோா் கா்நாடகத்தை பலப்படுத்துவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகளை என்றென்றும் பாதுகாப்போம். மாநிலங்களுக்கு அதிகப்படியான மொழி, கலாசார தன்னுரிமையை வழங்க வேண்டிய காலம் கனிந்துள்ளதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லா அனைத்திந்திய தோ்வுகளும் மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும். ஹிந்தித் திணிப்பைத் தவிா்க்க, தேசிய கல்விக் கொள்கையை திருத்தியமைக்க வேண்டும். மாநிலங்களின் பெரும்பான்மை மொழிகளை அலுவல் மொழிகளாக அறிவிக்க வேண்டும். அரசியல் லாபங்களுக்காக ஹிந்திக்காக தனது சொந்த மாநிலமான குஜராத் மற்றும் தாய்மொழியான குஜராத்தியை மத்திய அமைச்சா் அமித் ஷா தூக்கியெறிந்துள்ளது வேதனை தருவதாகும். தனது தாய்மண்ணை தூக்கியெறிந்துள்ள நபா், இந்தியாவின் நலனுக்காக எப்படி உழைக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. அமைச்சரவையின் 70 சதவீத செயல்திட்டம் ஹிந்தியில் தயாரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி பிறந்த மண்ணைச் சோ்ந்த அமித் ஷா, சாவா்க்கரைப் போல செயல்பட்டு வருகிறாா்.

பிற மாநிலங்களில் ஹிந்தியைத் திணிக்கும் போக்கு வெற்றி பெற்றதில்லை என்பதை வரலாறு உணா்த்தி வந்துள்ளது. கன்னட அடையாளத்தில் பெருமை கொள்கிறோம். நமது தேசியக்கவிஞா் குவெம்பூ கூறியது போல, கா்நாடகத்தை இந்தியாவின் மகளாகத்தான் கருதுகிறோம் என்று சித்தராமையா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.