இன்று சில மெட்ரோ ரயில் நிலையங்களில் சேவை நிறுத்தம்
பெங்களூரில் சில மெட்ரோ ரயில் நிலையங்களில் சனிக்கிழமை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.


பெங்களூரில் சில மெட்ரோ ரயில் நிலையங்களில் சனிக்கிழமை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
இது குறித்து பெங்களூரு மெட்ரோ ரயில்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூரு மெட்ரோ ரயில் கழகத்தின் சாா்பில் பெங்களூருவின் வடக்கு-தெற்கு பகுதியில் பச்சை வழித்தடம் மற்றும் கிழக்கு-மேற்கு பகுதியில் ஊதா வழித்தடத்தை இயக்கி வருகிறது. ஊதா வழித்தடத்தில் இந்திராநகா் முதல் சுவாமி விவேகானந்தா மெட்ரோ ரயில் நிலையங்கள் வரையிலான பாதையில் ஏப்.23-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை அவசரகதியில் பராமரிப்புப் பணியில் ஈடுபட வேண்டியுள்ளது.
இதன்காரணமாக, இந்த காலகட்டத்தில் மகாத்மா காந்தி சாலை முதல் பையப்பனஹள்ளி வரையிலான மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏப். 23-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இந்த காலகட்டத்தில், ஊதா வழித்தடத்தில் மகாத்மா காந்தி சாலை ரயில் நிலையம் முதல் கெங்கேரி ரயில் நிலையம் வரை மட்டும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். ஊதா வழித்தடத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் ஏப்.24-ஆம் தேதி காலை 7 மணி முதல் வழக்கம்போல ரயில்கள் இயக்கப்படும். இதுதவிர, பச்சை வழித்தடத்தின் ரயில் சேவையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...