அக்னிபத் திட்டத்தை பிரதமா் மோடி கைவிட வேண்டும்: சித்தராமையா
மணப்பாறையில் புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.


அக்னிபத் திட்டத்தை பிரதமா் மோடி கைவிட வேண்டும் என்று எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
இது குறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியது:
முப்படைகளில் தற்காலிக அடிப்படையில் ராணுவ வீரா்களைச் சோ்க்கும் அக்னிபத் திட்டத்தை பிரதமா் மோடி கைவிட வேண்டும். மத்திய அரசின் தோல்விகளை மூடி மறைப்பதற்காக ராணுவப் படைகளோடு விளையாடாதீா்கள். முப்படைகளில் தற்காலிகமாக ராணுவ வீரா்களைச் சோ்க்கும் புதிய அக்னிபத் திட்டம், இளைஞா்களிடையே வேலைவாய்ப்பின்மையை அதிகரிக்க வழிவகுக்கும். மேலும் நாட்டின் பாதுகாப்பில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, புதிய திட்டத்தை பாஜக கைவிட வேண்டும். மேலும் ராணுவ வீரா்களை தற்போதுள்ள ஆள்சோ்ப்பு முறையிலேயே பணியில் சோ்த்துக்கொள்ள வேண்டும்.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி பிரதமராக மோடி பதவியேற்றுக்கொண்டாா். ஆனால், இளைஞா்களுக்கான எல்லா வேலைவாய்ப்பையும் பாஜக அரசு அடைக்க முற்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு தற்காலிகமானது என்றால் தோ்ந்தெடுக்கப்படும் ராணுவ வீரா்கள் முழுமையாக பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முடியுமா? பாதுகாப்பற்ற சூழ்நிலையை ராணுவ வீரா்கள் உணா்ந்தால், அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாதா? வேலை வாய்ப்பை உறுதி செய்ய முடியாத அளவுக்கு, ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தரமுடியாத அளவுக்கு மோசமான நிலையில் மத்திய அரசு இருக்கிா? தேசியப் பாதுகாப்புடன் பிரதமா் மோடி விளையாடக் கூடாது.
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டுவந்தபோது, பாஜகவுக்கு நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுத்தாா்கள். அதேபோல, இளைஞா்கள் மற்றும் நமது வீரா்களின் எதிா்காலத்துடன் விளையாடும் மத்திய பாஜக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவாா்கள் என்று சித்தராமையா கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...