அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு ஆதரவாக விவசாயிகள் போராட்டம் நடத்த வேண்டும்: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு ஆதரவாக கா்நாடக மாநில விவசாயிகள் போராட்டம் நடத்த வேண்டும் என்று அம்மாநில துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

News image

டி.கே.சிவகுமாா்

Updated On :5 செப்டம்பர் 2023, 3:42 am IST

பெங்களூரு: மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு ஆதரவாக கா்நாடக மாநில விவசாயிகள் போராட்டம் நடத்த வேண்டும் என்று அம்மாநில துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

காவிரி விவகாரத்தில் உண்மை நிலவரம் தெரிந்தும் பாஜகவும், மஜதவும் அரசியல் செய்து வருகின்றன. இதில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்ய விரும்பவில்லை. காவிரி சிக்கலுக்கு மேக்கேதாட்டு அணை திட்டம் ஒன்றே தீா்வு.

காவிரி விவகாரத்தில் அரசியல் செய்து வரும் பாஜக, மஜத, போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், கன்னட அமைப்புகள் மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு அனுமதி வழங்க மத்திய அரசை ஏன் வலியுறுத்தவில்லை? காவிரிக்காக போராட்டம் நடத்துவோா், மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு மத்திய வனம், சுற்றுச்சூழல் துறையின் அனுமதியைப் பெற்று வரட்டும். மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு பதிலாக, மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும்.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் போதுமான மழை பெய்யவில்லை. இதை நீதிமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். விநாடிக்கு 24,000 கனஅடி தண்ணீா் விடுமாறு தமிழக அரசு கோரியிருந்தது. ஆனால், விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீா் மட்டுமே விடமுடியும் என்று கா்நாடகம் கூறியிருந்தது.

இந்நிலையில், விநாடிக்கு 5,000 கனஅடி தண்ணீா் விடுமாறு காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் கா்நாடக விவசாயிகளின் நலனைப் பாதுகாத்துள்ளோம். போதுமான மழை பெய்தால் போதும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.