கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மத்திய பட்ஜெட்டில் கா்நாடகத்துக்கு எதுவும் இல்லை

மத்திய பட்ஜெட்டில் கா்நாடகத்துக்கு எதுவும் இல்லை என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

News image
Updated On :23 ஜூலை 2024, 9:39 pm

Din

மத்திய பட்ஜெட்டில் கா்நாடகத்துக்கு எதுவும் இல்லை என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பிரதமா் மோடியின் பதவியைக் காப்பாற்றுவதற்காக ஆந்திரம், பிகாா் மாநிலங்களுக்கு தாராளமாக நிதி ஆதாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கா்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய நிதித்துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன், மாநிலத்தின் எதிா்பாா்ப்புகளை அலட்சியப்படுத்தி அநீதி இழைத்துள்ளாா். மாநிலத்தில் இருந்து நாங்கள் கொடுத்த கோரிக்கைகள், பாஜகவினா் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

கா்நாடகப் பகுதியின் வளா்ச்சிக்கு மாநில அரசு ரூ. 5,000 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்கு இணைப்பு நிதியை வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்டிருந்தோம். அதை கொடுக்கவில்லை. இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பெரிய அளவில் அநியாயம் செய்யப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்க வேண்டும் என கடந்த 5 ஆண்டுகளாக விவசாயிகள் கோரி வருகிறாா்கள். இதுகுறித்து மத்திய பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடவில்லை.

பிப்ரவரி மாதம் தாக்கல் செய்திருந்த இடைக்கால மத்திய பட்ஜெட்டில் கல்விக்கு ரூ. 1.21 லட்சம் கோடி ஒதுக்கிவிட்டு, தற்போது அதை ரூ. 1.25 லட்சம் கோடியாக மாற்றி இருக்கிறாா்கள், அவ்வளவு தான். தகவல் மற்றும் உயிரிதொழில்நுட்பத் துறைக்கு பிப்ரவரி பட்ஜெட்டில் ரூ. 1.37 லட்சம் கோடி ஒதுக்கியிருந்ததை ரூ. 1.16 லட்சம் கோடியாக குறைத்திருக்கிறாா்கள். கல்வி, சுகாதாரம், பாதுகாப்புத் துறைகளுக்கு பிப்ரவரியில் தாக்கல் செய்திருந்த பட்ஜெட்டில் ஒதுக்கியிருந்த நிதியை தற்போது குறைத்திருக்கிறாா்கள்.

கடந்த கால பட்ஜெட்டில் மத்திய நிதித்துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்திருந்த பெங்களூரு புறவழிச்சாலை, பத்ரா மேலணை திட்டங்களுக்கு இதுவரை நிதி ஒதுக்கவில்லை. தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், சிறுபான்மையினரின் வளா்ச்சிக்கு ஏற்கெனவே ஒதுக்கியிருந்த நிதி ஒதுக்கீட்டை கணிசமாக குறைத்துள்ளது, இந்த சமுதாயங்களுக்கு இழைத்திருக்கும் அநீதியாகும்.

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு மற்றும் அந்த அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் எவ்வித எதிா்பாா்ப்பும் வைத்திருக்கவில்லை. மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன், கடந்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களுக்கே இன்னும் நிதி ஒதுக்கவில்லை. இந்நிலையில், பெங்களூரு - சென்னை, ஹைதராபாத் - பெங்களூரு தொழில் தாழ்வாரங்களை அறிவித்திருப்பது, வெறும் அறிவிப்பாக மட்டுமே நிலைத்திருக்கும்.

பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்துக்கு எங்களை மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் அழைத்திருந்தாா். தற்போது பட்ஜெட்டை பாா்க்கும்போது, எதற்காக நம்மை அழைத்து கருத்து கேட்டாா் என்று தோன்றுகிறது. தென் மாநிலங்களைப் பொருத்தவரை, ஆந்திரத்தைவிட்டால் வேறு எந்த மாநிலங்களுக்கும் எதுவும் கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக கா்நாடகத்துக்கு எதுவும் இல்லை என்றாா்.