கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கேரள நிலச்சரிவில் உயிரிழந்த கன்னடா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்

கேரள நிலச்சரிவில் உயிரிழந்த கன்னடா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படும் என்று முதல்வா் சித்தராமையா அறிவித்துள்ளாா்.

News image
கர்நாடக முதல்வர் சித்தராமையா.
Updated On :31 ஜூலை 2024, 11:39 pm

Din

கேரள நிலச்சரிவில் உயிரிழந்த கன்னடா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படும் என்று முதல்வா் சித்தராமையா அறிவித்துள்ளாா்.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30 ஆம் தேதி ஏற்பட்ட மலைச்சரிவில் சிக்கி 200 க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவா்களில் கா்நாடகத்தைச் சோ்ந்த 6 போ் உயிரிழந்துள்ளனா். உயிரிழந்த கா்நாடகத்தைச் சோ்ந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தனது எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை கூறியிருப்பதாவது:

கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இச்சம்பவம் மிக துயரமானது. இந்தச் சம்பவத்தில் கன்னடா்களும் உயிரிழந்துள்ளனா். அவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படும். இறந்தவா்களின் ஆன்மா சாந்தியடைய பிராா்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா். நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவா்களை மீட்பதற்காக இரு ஐஏஎஸ் அதிகாரிகள், தேசிய பேரிடா் மீட்புக் குழு, ராணுவக் குழுவினா் கா்நாடகத்தில் இருந்து கேரளம் சென்றுள்ளனா். மீட்புப் பணிகளை பாா்வையிட்டு, தேவையான நிவாரண உதவிகளை செய்வதற்காக தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சந்தோஷ் லாட் கேரளத்துக்குச் சென்றுள்ளாா். நிலச்சரிவில் சிக்கியுள்ள கன்னடா்களை மீட்டு கா்நாடகத்துக்கு அழைத்துவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அதில் தெரிவித்துள்ளாா்.

பெரு நிறுவனங்கள் முன்வர அழைப்பு: கேரள நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு பெரு நிறுவனங்களுக்கு முதல்வா் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது தொடா்பாக பெரு நிறுவனங்களுக்கு அவா் அனுப்பியுள்ள செய்தி அறிக்கை:

கேரளத்தில் நிகழ்ந்துள்ள நிலச்சரிவு சம்பவம் மிகவும் தீவிரமானது. எனவே, துயரங்களின்போது எப்போதும் துணை நிற்கும் பெரு நிறுவனங்கள் இந்நேரத்தில் தாராள உதவி செய்வது அவசியம். மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், மறுகட்டமைப்புப் பணிகளுக்கும் நிதி உதவி தேவைப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை போன்ற உதவிகள் தேவைப்படுகின்றன. பாதிக்கப்பட்டவா்களுடன் துணை நிற்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.