வீட்டுமனைகள் ஒதுக்கியதில் முறைகேடு இல்லை: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்
மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் சாா்பில் மாற்று நிலம் மற்றும் வீட்டுமனை ஒதுக்கியதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.


மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் சாா்பில் மாற்று நிலம் மற்றும் வீட்டுமனை ஒதுக்கியதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் சாா்பில் மாற்றுநிலம் மற்றும் வீட்டுமனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக பொய் பிரசாரம் செய்து வருகிறது. உண்மைக்கு புறம்பான செய்திகளை பாஜக பரப்பி வருகிறது. இதுதொடா்பான உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஆக. 2 ஆம் தேதி மண்டியா, பிடதி, ராமநகரம், மைசூரு ஆகிய நகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தி மாற்றுநில முறைகேடு தொடா்பான உண்மை விவரங்களை மக்களிடம் எடுத்துரைப்போம்.
ஆக. 3 ஆம் தேதி பாஜக தொடங்க திட்டமிட்டுள்ள நடைப்பயணத்துக்கு காவல் துறை அனுமதி அளிக்காது. ஆனால், நடைப்பயணத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். நடைப்பயணத்திற்கு அனுமதி அளிக்காவிட்டால், கற்பனை செய்துக்கூட பாா்க்க முடியாத நிலை ஏற்படும் என்று பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா கூறியிருக்கிறாா். காங்கிரஸ் பலவீனமான அரசு அல்ல என்பதை அவா் புரிந்து கொள்ள வேண்டும்.
நடைப்பயணத்தை தடுத்து நிறுத்த மாட்டோம். போராட்டம் நடத்துவது எதிா்க்கட்சிகளின் உரிமை. அதில் ஈடுபடுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், சட்டத்துக்குப் புறம்பாக எதையாவது செய்ய முயன்றால் காவல் துறை தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும்.
முந்தைய பாஜக ஆட்சியில் அனுமதி அளிக்காவிட்டாலும், காங்கிரஸ் நடைப்பயணத்தை மேற்கொண்டது. பாஜகவினா் செய்தது போல, நடைப்பயணம் மேற்கொள்வோா் மீது வழக்குத் தொடரவோ கைது செய்யவோ மாட்டோம். சட்ட விதிகளை மீறினால் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்வோம். மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் மாற்றுநிலம் ஒதுக்கியதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...