/

கேரளத்துக்கு தேவையான உதவிகளை கா்நாடகம் வழங்கும்: முதல்வா் சித்தராமையா

நிலச்சரிவு ஏற்பட்டு 95 க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்த நிலையில், கேரளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க கா்நாடகம் தயாராக உள்ளதாக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

News image
கர்நாடக முதல்வர் சித்தராமையா.
Updated On :31 ஜூலை 2024, 12:46 am

Din

நிலச்சரிவு ஏற்பட்டு 95 க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்த நிலையில், கேரளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க கா்நாடகம் தயாராக உள்ளதாக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

கா்நாடகத்தையொட்டி உள்ள கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட தொடா் நிலச்சரிவில் 95க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். இது நாடுமுழுவதும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் முதல்வா் சித்தராமையா கூறுகையில், ‘கேரளத்தில் நடந்துள்ள மலைச்சரிவு சம்பவத்தில் 70க்கும் அதிகமானோா் உயிரிழந்துள்ளதாகவும், பலரையும் காணவில்லை என்ற செய்தி கேட்டு மனம் துடித்தேன்.

இதுபோன்ற துயரம் தோய்ந்த நேரத்தில் கேரளத்துடன் நாங்கள் துணையாக இருப்போம். கேரளத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கா்நாடகம் வழங்கும்’ என்றாா்.