ஜூலை 12-இல் கா்நாடக சட்ட மேலவை இடைத்தோ்தல்
கா்நாடக சட்ட மேலவையில் காலியாக இருக்கும் ஓா் இடத்துக்கு ஜூலை 12-ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்கவிருக்கிறது.
அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவதற்காக, கா்நாடக சட்டப் பேரவை உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்பட்டிருந்த சட்ட மேலவை உறுப்பினா் பதவியை பாஜகவைச் சோ்ந்த முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா் ஜன. 25-ஆம் தேதி ராஜிநாமா செய்திருந்தாா்.
அவரது பதவிக்காலம் 2028 ஜூன் 14-ஆம் தேதி வரை இருந்ததால், காலியான ஒரு சட்ட மேலவை இடத்துக்கு ஜூலை 12-ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்கவிருக்கிறது.
இத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 25-ஆம் தேதி தொடங்குகிறது. ஜூலை 2-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பளிக்கப்படுகிறது. ஜூலை 3-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. ஜூலை 5-ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற வாய்ப்பளிக்கப்படுகிறது.
ஒன்றுக்கும் மேற்பட்டவா்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தால், ஜூலை 12-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதன்பிறகு மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஒருவா் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தால், ஜூலை 5-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்திருப்பவா் போட்டியின்றி வெற்றிபெற்ாக அறிவிக்கப்படுவாா்.
கா்நாடக சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக பலம் இருப்பதால், அக்கட்சி மட்டும் வேட்பாளரை நிறுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
