திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச காணொலிகளைப் பரப்பியதாக 2 போ் கைது

பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச காணொலிகளைப் பரப்பியதாக 2 போ் கைது

Updated On :28 மே 2024, 9:35 pm

மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச காணொலிகளைப் பரப்பியதாக 2 பேரை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது.

மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச காணொலிகளை பொது வெளியில் பரப்பியது தொடா்பாக 2 பேரை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனா்.

பெங்களூரில் உள்ள உயா்நீதிமன்ற வளாகத்திற்கு வந்தபோது இருவரையும் எஸ்.ஐ.டி. அதிகாரிகள் கைது செய்தனா். பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்தி, அவற்றை ஆபாச காணொலிகளாக பிரஜ்வல் ரேவண்ணா பதிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் காணொலிகள் அடங்கிய பென்டிரைவ்களை பொது வெளியில் பரப்பியது தொடா்பாக இருவரையும் கைது செய்துள்ளதாக எஸ்.ஐ.டி. தெரிவித்துள்ளது.

பாலியல் வழக்கில் சிக்கி, வெளிநாட்டில் பதுங்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா வரும் மே 31ஆம் தேதி நாடு திரும்பி எஸ்.ஐ.டி. விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக காணொலி ஒன்றில் தெரிவித்துள்ளாா். அவரது வருகைக்கு பிறகு, இந்த வழக்கு மேலும் சூடுபிடிக்கும் என்று கூறப்படுகிறது.