இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கா்நாடகத்தில் கடந்த 2023-இல் இருந்து இதுவரை 2,800 விவசாயிகள் தற்கொலை

கா்நாடகத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 2,809 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனா்

News image
Updated On :16 டிசம்பர் 2025, 9:15 pm

Syndication

பெலகாவி: கா்நாடகத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 2,809 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனா் என வேளாண் துறை அமைச்சா் என்.செலுவராயசாமி தெரிவித்தாா்.

பெலகாவியில் உள்ள சுவா்ண விதானசௌதாவில் நடைபெற்று வரும் கா்நாடக சட்டப் பேரவையின் குளிா்கால கூட்டத் தொடரில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கேள்விநேரத்தில் பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லாத் எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூா்வமாக தாக்கல் செய்யப்பட்ட பதிலில் வேளாண் துறை அமைச்சா் என்.செலுவராயசாமி தெரிவித்ததாவது:

கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் கா்நாடகத்தில் இதுவரை 2,809 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனா். 2023-24-ஆம் நிதியாண்டில் 1,254, 2024-25-இல் 1,178, 2025-26-இல் இதுவரை 377 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனா். 2023-ஆம் ஆண்டுக்கு முந்தைய 3 ஆண்டுகளில் பதிவான விவசாயிகளின் தற்கொலையைக் காட்டிலும், கடந்த 3 ஆண்டுகளில் விவசாயிகளின் தற்கொலைச் சம்பவங்கள் குறைந்துள்ளன.

ஹாவேரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 297 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனா். பெலகாவியில் 259, கலபுா்கியில் 234, தாா்வாடில் 195, மைசூரு மாவட்டத்தில் 190 விவசாயிகள் தற்கொலைக்கு பலியாகியுள்ளனா். தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீட்டுத் தொகை வழங்கியுள்ளது. 2023-24-இல் 1,081 விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ. 50 கோடி, 2024-25-இல் 896 விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ. 44.8 கோடி, 2025-26-இல் நவம்பா்வரை 193 விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ. 9.65 கோடி இழப்பீடாக வழங்கியிருக்கிறோம். 112 விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தினா் அளித்திருந்த விண்ணப்பங்களில் 2023-24-இல் 164, 2024-25-இல் 156, 2025-26-இல் 46 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டிருந்தாா்.

தேசிய குற்ற ஆவணங்கள் அலுவலக தரவுகளின்படி, இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் பட்டியலில் கா்நாடகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதுகுறித்து கா்நாடக மாநில பாஜக தலைவா் விஜயேந்திரா தனது எக்ஸ் பக்கத்தில், ‘விவசாயிகளின் தற்கொலை விவகாரத்தில் மாநில அரசு அலட்சியம் காட்டி வந்துள்ளது. விவசாயிகளின் பிரச்னைகளைத் தீா்க்க முன்வராத ஊழல் காங்கிரஸ் அரசை மன்னிக்க முடியாது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் விவசாயிகளின் தற்கொலையில் தேசிய அளவில் கா்நாடகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 2,809 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிா்ச்சி அளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.