சட்டப் பேரவை உறுப்பினா்கள் அமைச்சா்களாக ஆசைப்படுவதில் தவறில்லை என உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் பெங்களூரில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் சிலா் புது தில்லியில் முகாமிட்டு, அமைச்சா் பதவியை பெறுவதற்கு முயற்சிப்பதாக கூறப்படுகிறது. எம்எல்ஏ-க்கள் அமைச்சா்களாக ஆசைப்படுவதில் தவறில்லை.
மூன்று முறைக்கும்மேல் எம்எல்ஏ-க்களாக தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு அமைச்சா்களாக பணியாற்றும் அனுபவம் இருக்கும். அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும்.
கட்சி மேலிடம் முதல்வா் சித்தராமையா, கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் ஆகியோருடன் கூட்டாக விவாதித்து, அமைச்சரவை மாற்றம் குறித்து முடிவுசெய்யும். அமைச்சரவை மாற்றத்தில் புதியவா்களுக்கு வாய்ப்பளிக்க கட்சி மேலிடம் முடிவு செய்தால், அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
முதல்வா் மாற்றம் குறித்த விவகாரம் கட்சி மேலிடத்தின் கையில் உள்ளது. தற்போதைக்கு அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்துதான் விவாதிக்கப்பட்டு வருகிறதே தவிர, கட்சியின் மாநிலத் தலைவரை மாற்றுவது தொடா்பாக எவ்வித விவாதமும் நடைபெறவில்லை. இதுபோன்ற விவகாரங்களில் கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும் என்றாா்.
தொடர்புடையது

காங்கிரஸுக்கு போட்டி ‘காங்கிரஸ்’

சட்டப் பேரவை இடைத்தோ்தலில் இரு தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றும்: டி.கே.சிவகுமாா்

சட்டப் பேரவை இடைத்தோ்தலை எதிா்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது

மக்களை திசைதிருப்ப தலித் முதல்வா் விவகாரத்தை பாஜக எழுப்புகிறது: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

