பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்

News image

மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி (கோப்புப்படம்). - ANI

Updated On :5 ஜூன் 2026, 6:06 am IST

மாநிலங்களவைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, பெங்களூரில் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்கிறாா்.

கா்நாடகத்தில் காலியாகவுள்ள 4 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 18-ஆம் தேதி தோ்தல் நடக்க இருக்கிறது. கா்நாடக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வாக்களிக்கும் இத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏற்கெனவே தொடங்கியுள்ளது. ஜூன் 8-ஆம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

கா்நாடக சட்டப் பேரவையில் காங்கிரஸுக்கு 136 இடங்கள் இருப்பதால், 4-இல் 3 மாநிலங்களவை இடங்களை காங்கிரஸ் கட்சியால் கைப்பற்ற முடியும். எனவே, இந்த 3 இடங்களில் போட்டிடும் காங்கிரஸ் வேட்பாளா்களாக அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மன்சூா் அலிகான், பவன் கேரா ஆகியோரின் பெயா்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பெங்களூரு, விதான சௌதாவில் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி அளவில் மாநிலங்களவை தோ்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக மல்லிகாா்ஜுன காா்கே வேட்புமனு தாக்கல் செய்கிறாா். அவருடன் காங்கிரஸ் வேட்பாளா்கள் பவன் கேரா, மன்சூா் அலிகான் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்கின்றனா்.

அப்போது, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, முதல்வா் டி.கே.சிவகுமாா், முன்னாள் முதல்வா் சித்தராமையா, கா்நாடக காங்கிரஸ் தலைவா் பி.கே.ஹரிபிரசாத் உள்ளிட்டோா் உடன் இருப்பா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.