லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பொதுமக்கள் காலணிகளைத் துடைத்து நலிந்தோருக்கு உதவும் மனிதநேயர்

பொன்னேரி, ஜன. 20:  காலணிகளை துடைத்து கால் இல்லாதவர்களுக்கும், பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கும் சேவை செய்து வரும் இளைஞரை தற்கால இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாய் கூறினால் அது மிகையா

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:53 am

ம.சுந்​த​ர​மூ​ர்த்தி

பொன்னேரி, ஜன. 20:  காலணிகளை துடைத்து கால் இல்லாதவர்களுக்கும், பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கும் சேவை செய்து வரும் இளைஞரை தற்கால இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாய் கூறினால் அது மிகையாகாது.

÷பொன்னேரி வட்டம், பாடியநல்லூரைச் சேர்ந்தவர் செல்வகுமார்(29).  இவர் எம்.ஏ., எம்.பில் படித்து முடித்து கருணை கரங்கள், மன வளர்ச்சி குன்றியோர் இல்லம் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆகியவற்றை நடத்தி வருகிறார்.

÷அத்துடன் உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு உதவும் நோக்கில் தமிழகம் முழுவதும் முக்கிய ஊர்களில் உள்ள ரயில் நிலையங்கள், பஸ்நிலையங்களுக்கு சென்று அங்கு வரும் பொதுமக்களின்  காலணிகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார். அதன் மூலம் கிடைக்கும் பணம் முழுதையும் ஏழை பள்ளி மாணவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்காக அளித்து வருகிறார்.

÷ஆரம்பத்தில் முழு நேரமும் இப்பணியை செய்து வந்த இவர் தற்போது வாரத்தில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் செய்து வருகிறார். கடந்த 2003-ம் ஆண்டு முதல் இப்பணியை செய்து வரும் செல்வகுமார் இதுகுறித்து கூறியது:÷கல்லூரி படிப்பை முடித்ததும் வாழ்க்கையில் எந்த சேவையையும் செய்யாதது ஒரு வெற்றிடம் போல் தோன்றியது.  இதையடுத்து உயர் பொறுப்பு வகிப்போரின் காலணிகளை சுத்தம் செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் பொருளாதார நிலையில் படிக்க இயலாமல் உள்ள மாணவர்களுக்கு அளித்து வருவதாகும் இதன் மூலம் என்னால் முடிந்த ஒரு சேவையை இந்த சமுதாயத்திற்கு வழங்கி வருகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.