பொன்னேரி, ஜன. 8: காரனோடை தொன் போஸ்கோ மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர்களால் நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளிப்பாளையம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணா கண்காட்சியை தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் லோரெட்டா முன்னிலை வகித்தார். அறிவியல், சமூகவியல் ஆகிய பிரிவுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தானியங்கி வாகனம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படைப்புகளை கண்காட்சியில் மாணவர்கள் படைத்திருந்தனர். கண்காட்சியை 100-த்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பார்த்து வியந்தனர். கண்காட்சியில் சிறந்த படைப்புகளை படைத்திருந்த மாணவர்களை பாராட்டி அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் பள்ளி தாளாளர் தெரேஸô.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.