கடலூர், ஜன. 8: கடலூர் மாவட்டத்தில் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள், பெண்கள் காப்பகங்கள், அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்து உள்ளார்.
ஆட்சியர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகங்கள், அவர்களின் கட்டணம் மற்றும் நன்கொடை, முதியோர் இல்லங்கள், மகளிர் காப்பகங்கள் அனைத்தும் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்யத் தேவையான விண்ணப் படிவங்கள் மாவட்ட சமூக நல அலுவலரைத் (கடலூர் செம்மண்டலத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகம்) தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
2011 ஜனவரிக்குள் பதிவு செய்யாத தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது உரிய, சட்டப் பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.