கடலூர், ஜன. 8: சட்டப் பேரவைத் தேர்தலுக்கான துணை வாக்காளர் பட்டியல் 10-ம் தேதி வெளியிடப்படும் என்று, கடலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளர், மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஜதீந்திரநாத் ஸ்வெயின் தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், கடலூரில் வெள்ளிக்கிழமை நடந்தது.
கூட்டத்துக்கு மாநில கூட்டுறவுத் துறை பதிவாளரும், கடலூர் மாவட்டத் தேர்தல் பார்வையாளருமான ஜதீந்திரநாத் ஸ்வெயின் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் முன்னிலை வகித்தார் . கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர் மற்றும் ஆட்சியர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் வருகிற 10-ம் தேதி துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு 1,848 வாக்காளர் நிலை அலுவலர்கள் மூலம், வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தனர்.
மேலும் 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செயப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், தி.மு.க. சார்பில் நாராயணசாமி, அ.தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத், செல்வி ராமஜெயம் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், நகர காங்கிரஸ் தலைவர் ரகுபதி, இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் ஜெகரட்சகன், பா.ம.க. சார்பில் துணைப் பொதுச் செயலாளர் திருமால்வளவன், பாரதீய ஜனதா கட்சி சார்பில் ரா.குணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.