செஞ்சி அருகே இளைஞர் கொலை: சென்னையைச் சேர்ந்தவரா?
செஞ்சி, ஜன. 8: செஞ்சி அருகே இளைஞர் ஒருவர் கொலை செய்யபட்டார். அவர் சென்னையைச் சேர்ந்தவரா என்பது குறித்து போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர். திங்கள்கிழமை இளைஞர் ஒருவரை ஆட்டோவில் அழைத்து வந்து வெட்டுக்


செஞ்சி, ஜன. 8: செஞ்சி அருகே இளைஞர் ஒருவர் கொலை செய்யபட்டார். அவர் சென்னையைச் சேர்ந்தவரா என்பது குறித்து போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திங்கள்கிழமை இளைஞர் ஒருவரை ஆட்டோவில் அழைத்து வந்து வெட்டுக்காயங்களுடன் செஞ்சி அரசு மருத்துவமனையில் மர்ம நபர்கள் இறக்கி விட்டு சென்றனர். அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் ஆபத்தான நிலையில் சுய நினைவின்றி கிடந்தவருக்கு முதலுதவி அளித்து செஞ்சி போலீஸôருக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் செஞ்சி போலீஸôர் ஆபத்தான நிலையில் இருந்த இளைஞரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் கடந்த 4-ம் தேதி இறந்து விட்டார்.
அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. மேல்மலையனூர் அமாவாசை திருவிழாவுக்கு வந்திருக்கலாம் என்றும், அவரது நெற்றி மற்றும் உள்ளங்களையில் குங்குமம் உள்ளது. தலையில் கத்தியால் வெட்டப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் சென்னையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் போலீஸôர் சந்தேகிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...