புதுச்சேரி, அக். 8: தேர்தல் பணியில் இருந்து புதுச்சேரி தெற்குப் பகுதி போலீஸ் கண்காணிப்பாளர், இந்திரா நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி ஆகியோரை நீக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து அதிமுக செயலரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆ. அன்பழகன் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கடிதம்:
÷புதுச்சேரியில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பல்வேறு விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன. முதல்வர் ரங்கசாமி விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டுள்ளார். ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்துள்ளனர். மேலும் பல்வேறு பரிசுப் பொருள்களைக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆளும் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக சில அரசு ஊழியர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற பிரசாரத்தை வீடியோ எடுக்காமல் விட்டுவிடுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் பல புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உள்ளூர் போலீஸ் மற்றும் அதிகாரிகள் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்குச் சாதமாக நடந்து கொள்கின்றனர். இது போன்ற நிலையில் குறிப்பிட்ட பகுதியின் போலீஸ் கண்காணிப்பாளர் மற்றும் இத்தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியை தேர்தல் பணியில் இருந்து நீக்க வேண்டும்.
இத்தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலுக்கு மத்திய துணை ராணுவப்படையைக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் அன்பழகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








