புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பூந்தமல்லி தாலுகாவில் பழஞ்சூர், பாப்பான்சத்திரம் இணைக்கப்படுமா?

திருவள்ளூர், ஏப். 28: ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் இருக்கும் பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராமங்களை பூந்தமல்லி தாலுகாவுடன் இணைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.  திருவள்ளூர் வ

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:54 pm

சுஜித்குமார்

திருவள்ளூர், ஏப். 28: ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் இருக்கும் பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராமங்களை பூந்தமல்லி தாலுகாவுடன் இணைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.

 திருவள்ளூர் வருவாய் மாவட்டத்துக்குட்பட்ட பூந்தமல்லி தாலுகாவில் செம்பரம்பாக்கம் ஊராட்சி உள்ளது. இதற்குட்பட்ட பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராமங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

 மேற்கண்ட இரு கிராமங்களும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் வருவாய்த் துறை தவிர பிற அனைத்தும் பூந்தமல்லி தாலுகாவில்தான் உள்ளன. சட்டப்பேரவை தொகுதி, காவல்துறை, அரசு அலுவலகங்கள் மற்றும் தங்கள் தேவைகளுக்காக பொதுமக்கள் பூந்தமல்லிதான் சென்று வருகின்றனர். ஆனால் வருவாய்த் துறை தொடர்பான சான்றிதழ் பெறுவது, பட்டா, உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக ஸ்ரீபெரும்புதூர் செல்ல நேரிடுவதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

 இதுதொடர்பாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 2 கிராம மக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தும் பயனில்லை.

 அரசாணை: கடந்த 19.1.1999-ல் வெளியிட்டுள்ள அரசாணை எண்.1-ல் பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராமங்களை பூந்தமல்லி தாலுகாவில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

 இதுதொடர்பாக செம்பரம்பாக்கம் ஊராட்சித் தலைவர் தே.முனியன் கூறியது: ஏற்கெனவே இக்கோரிக்கை தொடர்பாக பலமுறை மனுக்களை அளித்துள்ளோம். ஊராட்சி மன்றக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

 ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் இருந்து பூந்தமல்லி தாலுகாவில் இரு கிராமங்களையும் இணைத்தால் இரு கிராமத்தினருக்கும் மிகுந்த பலன் கிடைக்கும். தேவையற்ற பொருள் விரயம், நேர விரயம் தவிர்க்கப்படும். வருவாய் மாவட்டமே மாறுவதால் பல்வேறு பிரசினைகளை எதிர்நோக்க வேண்டி உள்ளது.

 அரசு தரும் விலையில்லா பொருள்களை கிராம நிர்வாக அலுவலர் மூலமே பெற வேண்டி உள்ளதால் பெரும் சிக்கல் எழுகிறது. இதுகுறித்து ஆட்சியரிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஏற்கெனவே உள்ள அரசாணையை நிறைவேற்றினாலே போதுமானது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.