சென்னை: எல்&டி நிறுவனம் முப்பரிமாண அச்சாக்க முறையில் (3டி பிரிண்டட்) முதன்முறையாக தரைத் தளம் மற்றும் ஒரு மேல் தளம் (ஜி+1) கொண்ட கட்டிடத்தை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
முப்பரிமாண அச்சாக்கம் என்பது கணினி கட்டுப்பாட்டின் கீழ் கட்டுமான வரைபட அடிப்படையில் முப்பரிமாணத்தில் காங்கிரீட் கலவையை ஒரு அடுக்கின் மேல் மற்றொரு அடுக்காக கட்டமைக்கும் ஒரு நவீன தொழில்நுட்ப முறையாகும்.
எல் & டி நிறுவனம், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் முதன் முறையாக 700 சதுர அடி பரப்பளவிலான தரை தளம் மற்றும் ஒரு மேல் தளம் (கிரவுண்ட் பிளஸ் ஒன்-ஜி+1) கொண்ட கட்டடத்தை 106 மணி நேரத்தில் உருவாக்கியுள்ளது.
2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீட்டுவசதி வழங்குவதற்கான 6 கோடி வீடுகளை கட்டமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், எல்&டி-யின் முப்பரிமாண அச்சாக்க நவீன கட்டுமான முறை வெகுஜன மக்களுக்கு விரைந்து வீட்டு வசதி வழங்க மிகப் பெரிய வாய்ப்பாக இருக்கும் என எல்&டி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.