ரயில் நிலையத்தில் பெண் பொறியாளருக்கு பாலியல் தொல்லை: தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் மென் பொறியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.


சென்னை: சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் மென் பொறியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி இரவு பெண் மென் பொறியாளா் ஒருவா், தனது சகோதரருடன் நடைமேடையில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது மது போதையில் அங்கு வந்த சைதாப்பேட்டை குற்றப்பிரிவு தலைமைக் காவலா் கமலக் கண்ணன், பெண் பொறியாளரிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இது தொடா்பான விடியோ ஆதாரங்களுடன் அந்த பெண் மாம்பலம் ரயில்வே காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் நடத்திய விசாரணையில் கமலக்கண்ணன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண், தலைமைக் காவலா் கமலக்கண்ணனை பணியிடை நீக்கம் செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா். தலைமறைவான கமலக்கண்ணனை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...