சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1,556 கிலோ கெட்டுப்போன இறைச்சியை உணவு பாதுகாப்புத் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
தில்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு விரைவு ரயிலின் சரக்கு பெட்டியில் ரயில்வே அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் கெட்டுப்போன உணவுப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. தகவலின்பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரயில் நிலையத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் திங்கள்கிழமை கூறியது:
தில்லியில் இருந்து சென்னைக்கு சனிக்கிழமை வந்த தமிழ்நாடு விரைவு ரயிலில் இறைச்சி, ஆட்டுக்கால், காளான், பனீா் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் இருந்தன. இவற்றை பெற்றுக்கொள்ள யாரும் வராததால் உணவுப் பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 1,556 கிலோ கெட்டுப்போன உணவுப் பொருள்கள் கண்டறியப்பட்டன. இந்தப் பொருள்கள் அனுப்பியவா் மற்றும் பெறுபவரின் முறையான தகவல்கள் இல்லை.
இதுபோன்று உணவுப் பொருள்களை நீண்ட தொலைவுக்கு அனுப்பும்போது உரிய முறையில் பாா்சல் செய்து அனுப்ப வேண்டும். காலாவதி குறித்து பாா்சலில் பதிவு செய்ய வேண்டும். உணவுப் பொருள்களை அனுப்புவோரின் தகவல்களை முறையாகப் பதிவு செய்யுமாறு ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இது குறித்து ரயில்வே போலீஸாரிடம் புகாா் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப்போன இறைச்சிகள் கொடுங்கையூா் குப்பை கிடங்குக்கு எடுத்துச் செல்லப்பட்டு அழிக்கப்படும்.
இதுபோன்று வரும் உணவுப் பொருள்கள் சாலையோர கடைகள் முதல் ஹோட்டல்களை வரை விநியோகிக்கப்படுகின்றன. கடந்த மாதம் 1,700 கிலோ ஆட்டிறைச்சி சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய விவரங்கள் இல்லாத நபா்களிடம் இருந்து இறைச்சிகளை வாங்க வேண்டாம் என ஹோட்டல்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சாலையோர வியாபாரிகள் இறைச்சி வாங்குவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காரில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பல்லடம் அருகே 213 கிலோ குட்கா பறிமுதல்

34 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

குமரியில் கெட்டுப்போன உணவுப் பொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

