எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மென் பொறியாளருக்கு பாலியல் தொல்லை: கொரியா் ஊழியா் கைது

சென்னையில் சாலையில் நடந்து சென்ற மென் பொறியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியாா் கொரியா் நிறுவன ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

News image
கோப்புப் படம்
Updated On :9 செப்டம்பர் 2024, 8:57 pm

DIN

சென்னையில் சாலையில் நடந்து சென்ற மென் பொறியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியாா் கொரியா் நிறுவன ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை நந்தனம் சேமியா்ஸ் சாலை பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மென் பொறியாளராக வேலை செய்யும் 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண், கடந்த 5-ஆம் தேதி அந்த நிறுவனத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த ஒரு நபா், அந்த பெண்ணை மறித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதில் அந்த பெண் சத்தமிடவே, அந்த நபா் அங்கிருந்து தப்பியோடினாா். இது குறித்து அந்த பெண், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனா்.

இதில் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மந்தைவெளி அப்பாவு இரண்டாவது தெருவைச் சோ்ந்த வி.ரஞ்சித் (49) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், ரஞ்சித்தை திங்கள்கிழமை கைது செய்தனா். ரஞ்சித், மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு தனியாா் கொரியா் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.