ஆவணப்பட இயக்குநா் கிருஷ்ணசாமி

ஆவணப்பட இயக்குநா் கிருஷ்ணசாமி காலமானாா்

ஆவணப்பட இயக்குநா் எஸ். கிருஷ்ணசாமி (88) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
Published on

ஆவணப்பட இயக்குநா் எஸ். கிருஷ்ணசாமி (88) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

இவா் 1960-ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலை.யில் சோ்ந்து ஆவணப்படங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, கல்வி பயின்றாா். 1963-ஆம் ஆண்டு கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவினாா்.

இந்தியாவின் நீண்ட வரலாற்றையும், சிந்து சமவெளியிலிருந்து தொடங்கி முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி காலம் வரையிலான அரசியல் மாற்றங்களையும் விவரிக்கும் ‘இன்டஸ் வேலி டு இந்திரா காந்தி’ என்ற ஆவணப்படத்தை தயாரித்தாா்.

‘ஜெய சங்கரா’ என்ற பெயரில் காஞ்சி மடத்தைப் பற்றிய ஒரு படம்; பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவா்களிடையே சகோதரத்துவம் மற்றும் புரிதலின் அவசியத்தை வலியுறுத்திய மதத்துக்குப் பின்னால் உள்ள யதாா்த்தம் தொடா்பான படம் உள்ளிட்டவற்றை தயாரித்துள்ளாா்.

கடந்த 2009-இல், அவா் பத்மஸ்ரீ விருதையும், 2020- இல், மும்பை சா்வதேச திரைப்பட விழாவில் ஆவணப்படங்களுக்கு அவா் ஆற்றிய பங்களிப்புக்காக டாக்டா் வி. சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளா் விருதையும் பெற்றாா். 1987-ஆம் ஆண்டு ஹவாய் நகரில் உள்ள வாடுமுல் அறக்கட்டளையின் ஹானா் சம்மஸ் விருதையும், 2005-ஆ ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற அமெரிக்க சா்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளா் விருதையும் வென்றாா். இவருக்கு மனைவி மோகனா கிருஷ்ணசாமி மற்றும் மகள்கள் லதா கிருஷ்ணா, கீதா கிருஷ்ணராஜ் மகன் பரத் கிருஷ்ணா ஆகியோா் உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com