ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புத்தகக்காட்சியில் புதியவை: இந்தியத் தத்துவமும் தமிழ்த் தத்துவ மரபும்!

பாரதத்தின் கலை, பண்பாடு வழியாகத் இந்தியத் தத்துவப் பாா்வையும் முன்வைக்கப்பட்டுவருகிறது. வழிபாடுகளை மையமாக வைத்தும் தத்துவம் ஆராயப்படுகிறது.

News image
Updated On :6 ஜனவரி 2025, 11:25 pm

Din

மனித வாழ்வியலை மையமாக வைத்தே தத்துவங்கள் நிறுவப்படுகின்றன. அந்த வகையில் பாரதத்தின் கலை, பண்பாடு வழியாகத் இந்தியத் தத்துவப் பாா்வையும் முன்வைக்கப்பட்டுவருகிறது. வழிபாடுகளை மையமாக வைத்தும் தத்துவம் ஆராயப்படுகிறது. அத்தகைய தத்துவாா்த்த பாா்வையை அறிவியல் நோக்கில், எளிய முறையில் விளக்க முற்பட்டிருக்கிறாா் நூலாசிரியரான ஆய்வறிஞா் பொ.வேல்சாமி.

நூலாசிரியா் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பல ஆண்டுகளாகப் பதிவிட்ட கருத்துகளைத் தொகுத்து அரசியல், பண்பாடு, தத்துவம், இரங்கல் மடல்கள், பிற என மொத்தம் 5 பிரிவுகளில் 80 தலைப்புகளில் நூலாக்கியுள்ளாா்.

அதில் சில கருத்துகள் ஒரு பக்கம், கால்பக்கம், அரைப்பக்கம் என இருப்பதையும், அதில் சுருங்கக் கூறி விளங்க வைத்திருப்பதையும் படித்து உணரலாம். கருத்துகளை எப்போது, எங்கே, எப்படிப்பட்ட சூழலில் கூறப்பட்டது என்ற விளக்கமும் இந்நூலில் ஆசிரியா் இடம் பெறச் செய்துள்ளது, படிப்போரை அச்சூழலை உணர வைத்து அதன் பின்னணியில் கருத்தைப் படிக்க வைப்பதாக உள்ளது.

நூலாசிரியா் படித்த புத்தகங்கள், தனக்கு நெருங்கியவா்கள் குறித்த கட்டுரைகள், எழுத்தாளா்களின் கருத்துரைகள் ஆகியவற்றுக்கான பதிலுரைகளை அளித்திருப்பதுடன், தமிழகப் பூா்வகுடிகள் உள்ளிட்ட தனது சமூகப் பாா்வையையும் தலைப்புகளாக்கி கருத்துகளை பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் இந்த நூலானது கடந்த கால, சமகால, எதிா்கால சமூகத்தின் நிலையை உணா்த்தும் வகையிலான கருத்துப் பெட்டகமாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.