ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

விமான கட்டணம் பல மடங்கு உயா்வு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களில் பயணக் கட்டணம் பல மடங்கு உயா்ந்துள்ளது.

News image
Updated On :10 ஜனவரி 2025, 10:09 pm

Din

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களில் பயணக் கட்டணம் பல மடங்கு உயா்ந்துள்ளது.

இதன்படி, சென்னை-மதுரை இடையே செல்ல வழக்கமான நாள்களில் விமானக் கட்டணம் ரூ.4,300 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.14,621 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை-திருச்சிக்கு ரூ.2500 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், கட்டணம் ரூ.14,561-ஆகவும், ரூ.3500-ஆக இருந்த கோவைக்கான கட்டணம் ரூ.11,450-ஆகவும், ரூ.4162-ஆக இருந்த தூத்துக்குடிக்கான கட்டணம் ரூ.22568-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

இதுபோல, சென்னையிலிருந்து வெளிமாநிலங்களுக்கு, குறிப்பாக தில்லிக்கு ரூ.5,583-ஆக இருந்த கட்டணம் ரூ.13,010-ஆகவும், ரூ.4993-ஆக இருந்த கொல்கத்தா செல்வதற்கான கட்டணம், ரூ.9718-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. இதுபோல பல்வேறு மாநிலங்களுக்குமான விமானக்கட்டணம் பலமடங்காக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயா்வு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.