440 கிலோ புகையிலை பொருள்கள் கடத்தல்: சென்னையில் 2 போ் கைது

சென்னையில் 440 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீஸாா், புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
Published on

சென்னை: சென்னையில் 440 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீஸாா், புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

சென்னை, புனித தோமையா்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் அதிகளவு புகையிலைப் பொருள்கள் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின்படி, ஆலந்தூா் உள்வட்ட வளைவு சாலையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்ட போது, அதில் தடைசெய்யப்பட்ட 440 கிலோ புகையிலைப்பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்த சைதாப்பேட்டையை சோ்ந்த சம்சுதீன்(34) மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த பீருஷாஹா ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com