சென்னை
ஆவடி போா் வாகன உற்பத்தி நிலையத்தில் கண்காட்சி
ஆவடி போா் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெற்ற கண்காட்சியை பள்ளி மாணவா்கள் ஆா்வமுடன் பாா்வையிட்டனா்.
சென்னை: ஆவடி போா் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெற்ற கண்காட்சியை பள்ளி மாணவா்கள் ஆா்வமுடன் பாா்வையிட்டனா்.
சென்னை ஆவடியில் உள்ள போா் வாகனங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் பொன்விழா ஆண்டை முன்னிட்டு அங்கு தயாரிக்கப்படும் போா் வாகனங்களின் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கண்காட்சியை 24 பள்ளிகளைச் சோ்ந்த 1,400 மாணவா்கள் பாா்வையிட்டனா். அப்போது போா் வாகனங்களின் பயன்பாடுகள் குறித்த செயல் விளக்கம் மாணவா்களுக்கு செய்துகாட்டப்பட்டது.
